நெடுநாளாய் ஒரு கதாபாத்திரத்தை எனக்கு பிடித்தமாதிரி வடிவமைத்து, அப்பாத்திரத்தை முன்னிறுத்தி ஒரு கதையெழுத வேண்டுமென்ற என்னுடைய எண்ணம் இப்போதுதான்  கைகூடியுள்ளது. அக்கதாப்பாத்திரத்தை இப்போது ஒரு 12 அல்லது 13 வயது சிறுவனாக முதலில் படைத்துத் துவக்குகிறேன். கதையின் போக்கில், இடையில் அச்சிறுவன் சிறுமியாகலாம் ஆணாகலாம் பெண்ணாகலாம் யாராகவும் ஏதுவாகவும்கூட ஆகலாம்.

இப்போதைக்கு இவனது பாத்திரமானது சமூக அவலத்திற்கு எதிரான so called முற்போக்கான, எல்லாவற்றையும் இவ்வயதிலேயே புரிந்துகொள்ளக்கூடிய, பல '_ist'க்களின் கொள்கைகளை அறிந்திராத ஆனால் அவற்றை தெரியாமலேயே கைக்கொள்ளுகிற ஒருவன் (எழுதுகிற எனக்கே சரியாகத்தெரியாது பலரது கொள்கைகளை). இந்த சிறுவனுக்கு நான் ஏதோ ஒரு பெயரையிட்டு அதன்மூலம் அவனுக்கு ஜாதிமத ரீதியிலான சாயம் பூசப்படுவதை நான் விரும்பவில்லை, ஏன் அவனுக்கேக்கூட அது பிடிக்காது.

வேண்டுமானால் அவனுக்கு யூடியூபில் தமிழில் புகழ்பெற்று விளங்கும் கோவையை சார்ந்த அரசியல் நையாண்டி சேனலான 'நக்கலைட்ஸ்'ஸின் ஆஸ்தான நாயகியான 'ஸ்ரீஜா'க்கு ஒருவேளை ஒரு தம்பியிருந்தால் எப்படியிருப்பானோ, அப்படி ஒரு உருவத்தை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள்.

முதல்காட்சியிலேயே ஒரு மருந்துக்கடையில் அவன் நின்று கொண்டிருப்பதாய் ஆரம்பிக்கிறது இக்கதை...

"அண்ணா, ஒரு whisper extra large 8 pad இருக்கும்ல அது ஒரு பாக்கெட் வேணும், காசு இந்தா இந்த டப்பாமேல வச்சுட்டேன் எடுத்துக்கோங்க".

"தம்பி coverரு?"

"coverலாம் வேணாம்ணா, நான் சும்மாவே கொண்டுபோய்க்கிறேன்" என்று சொல்லி அதை எடுத்துக்கொண்டு தன் இரு கைகளிலும் மாறிமாறிப்பிடித்து catch & catch விளையாடிக்கொண்டே வீட்டிற்கு ஓடி சென்றுகொண்டிருந்த நேரத்தில், வழியில் ஒரு நடுத்தர வயதுக்காரர் அவனை தடுத்துநிறுத்தி,

"ஏம்பா தம்பி இதை இப்படி openனா தெரியுறமாதிரி விளையாடிட்டே கொண்டுபோய்ட்டு இருக்க, கவர் தரலையா கடைக்காரன்?"எனக்கேட்க,

"இல்ல uncle தந்தாங்க, நான்தான் வேண்டானுட்டு urgentனு சொல்லி  வாங்கிட்டு வந்துட்டேன்".

அவர், "இது என்னானு தெரியுமா, நீபாட்டுக்கு இப்படி எல்லாருக்கும் தெரியுற மாதிரிபோற, சட்டைக்குள்ளயாச்சும் மறச்சுவச்சு கொண்டுபோப்பா"என்றார்.

"uncle, இது என்னானும் எனக்குத்தெரியும் எதுக்கும்னும் எனக்கு தெரியும், menopause periodல ladies useபண்ணுற sanitary napkin pads, இப்போ நானித எங்கம்மாவுக்காக வாங்கிட்டுப் போய்ட்டிருக்கேன்".

சொன்னதுதான் தாமதம் அவர் இதை எதிர்பார்க்காததால், அவர்முகத்தில்தோன்றிய தோன்றிய அந்த அதுக்கு என்னபெயர் வைப்பதே தெரியவில்லை.

"ஏன் நீங்க உங்க அம்மாக்கெல்லாம் இதை வாங்கிக்கொடுத்தது இல்லையா, என் வயசுல நீங்க இருக்குறப்போ?" எனக்கேட்டுவிட்டு அவசரம் காரணமாக பதில்கூட கேட்காமல் போய்விட்டான்.

பின் அவன் போனதுகூட தெரியாமல் அவர், "தம்பி இதெல்லாம் உனக்கு யாரு..."என்று திரும்பித்தேடி பார்த்தபோதுதான் அவன் இல்லையென்பதை அறிந்து, "என்ன பையனோ இவன்?!" என்றபடியே நடையைக்கட்டினார்.

அவனும் போய்ட்டான் அவரும் போய்ட்டாரு இப்போ அந்த கேள்விமட்டும் இன்னும் அங்கையே அப்படியே இருக்கு உங்க பதிலுக்காக, "நீங்க உங்க அம்மாக்கு வாங்கிக்குடுத்தது இல்லையா?".


 தொடரும்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொரோனாவால் விளைந்தவை

வாழ்க்கைத்துணை

மாற்றமில்லை