இடுகைகள்

மே, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாதீ 🔥

படம்
இப்பல்லாம் யார்சார் சாதிபாக்குறா?:        "நானல்லாம் சாதி பாக்குற ஆளில்ல, அப்படிப்பாத்தும் பழகுற ஆளில்ல, என் நண்பர்கள்லாம் எந்த சாதினு எனக்குத் தெரியாது, நானும் அதல்லாம் தெரிஞ்சிக்கவும் மாட்டேன்" என்று நம்மில் ஒருசிலர் பெருமையாகக் கூறக்கேட்டிருப்போம், ஏன் நம்மில் ஒருசிலர் இப்படி பெருமை பேசியேக்கூடவுமிருப்போம்.        ஆனால் என்றைக்கேனும் நாம் இப்படி யோசித்திருப்போமா, மேற்குறிப்பிட்டதுபோல பேசிய நபரோ அல்லது பேசிய நாமோ நிச்சயமாக So Called ஆண்ட பேண்ட என அழைக்கப்படும் ஏதோவொரு ஆதிக்கச் சமூகத்தை சார்ந்தவராகவும் பேசிய அத்தருணத்தில் கேட்பவர்களில் தெரிந்தோ தெரியாமலோ ஒருசிலராவது  அவர்களது ஆதிக்கத்திற்குகீழ் உட்பட்டிருந்ததாக அவர்களால் காலங்காலமாக நம்பம்பட்டுவருகிற ஏதோவொரு சமூகத்தினை சார்ந்தவராகவும் இருந்திருப்பர்.        இதேப்போன்ற ஒரு கருத்தினை நாம் தாழ்ந்த சாதிக்காரர்கள் என்று வரையறுத்து வைத்திருக்கிறவர்களில் எவரேனும் பெருமையோடு கூறினால், அக்கூற்றினை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நம்மில் எத்துனைபேருக்குண்டு? "நீயென்னடா/டி எங்கள்ட சாதிபாக்காம பழகுறனு