இடுகைகள்

ஜூன், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்க்கைத்துணை

படம்
குணசாலியான ஸ்திரீயை கண்டுபிடிப்பவன் யார்?  மனிதரில் யாருமில்லை/ஒருவருமில்லை என்பதே பதிலாகும். இங்கு யாருமில்லை/ஒருவருமில்லை என்பதை கண்டுபிடிப்பவனுக்கோ அல்லது குணசாலியான ஸ்திரீக்கோ எடுத்துக்கொள்வது படிப்பவரின் தனிப்பட்ட விருப்பம். நமக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணை, எவ்வாறு இருக்கவேண்டுமென்ற பலவாறான எண்ணம் நம் அனைவருக்கும் இருக்கும்தானே, அதில் ஜெபத்தின் பங்கே மிகமுக்கியம். ஜெபத்தின் மூலமே தான் நாம் நமக்கான துணையை தேர்ந்தெடுக்க முடியும். அதிலும் குறிப்பாக நாம் எப்படியெல்லாம் இதற்காக ஜெபிக்க வேண்டும் என்று பலரும் பல நல்ல நல்ல ஆலோசனைகளையும் வழிமுறைகளையும் நிறையவே வழங்கி இருக்கின்றனர்.  "தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்." யோபு 42 : 2ன்படி நானும் எனது விருப்பத்தையும் எதிர்பார்ப்பினையும் எப்படி ஒருசேர இணைத்து ஜெபிக்கிறேன் என்பதனை இப்பதிவின் வாயிலாக சொல்லியிருக்கின்றேன் அவ்வளவே. விருப்பமிருப்பின் தொடர்ந்து படியுங்கள், இல்லையேல் எனது மற்ற பதிவினை படித்துவிட்டு தங்களது மேலான கருத்துக்களை தெரிவித்துவிட்டுப் போங்கள்...  மனைவிமார்களா