இடுகைகள்

மே, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொரோனாவால் விளைந்தவை

படம்
Quarantine - தனிமைப்படுத்துதல் Pandemic - சர்வதேச பரவல் Pestilence - கொள்ளை நோய் Plagues - வாதைகள் Lock-down - முடக்குதல் Social distancing - சமூக விலகல் / சமூக இடைவெளி Write off - ஒத்திவைப்பு செய்தல் & Waive off - தள்ளுபடி செய்தல் (முதலாவதில், வாங்கிய பணத்தை வாங்கியவர்கள் திருப்பித் தரவேமாட்டார்கள்; இரண்டாவதில், பணம் கொடுத்த வங்கிகள் பணத்தை திரும்பப்பெறவே மாட்டார்கள்) Hydroxychloroquine - மலேரியாவிற்கான மருந்து. Heist - திருட்டு இத்தகைய பல புதிய புதிய வார்த்தைகளை நாம் கற்றுக்கொள்ள வழிவகை செய்தது. "Positive" என்றவொரு நல்ல வார்த்தையை நம் அனைவரையும் வெறுப்புக்கொள்ள செய்தது. இரு தாயக்கட்டைகளில், ஒன்றில் தாயமும் மற்றொன்றில் மூன்றும் விழுந்தால் அது 'சோநாலு', இரண்டிலும் இரண்டிரண்டு விழுந்தால் அது வெறும் நாலு என்கிற வேறுபாட்டினை அறியச்செய்தது. 'போடா... கன்னட பொல்லாதவன்' என்று ஒருவரை திட்டுவதற்கு புதிய வசைமொழியை தந்திருக்கிறது. 30000 கோடியில் 40% என்பது 20000 கோடி என்கிற பள்ளிகளிலும் நாம் படித்திராத ஒரு அரும்பெரும் கணக்கினை அறியசெய்தது. டல்கோணா காஃபி

செலவிடுதல்

படம்
இன்றையநாளில் மொபைல் போன் இல்லாத மனிதர்களே இல்லை எனலாம். அதிலும் ஆண்ட்ராய்டு போன் இல்லாத இளைஞர்களே இல்லை எனலாம். பொதுவாக நாம் அதில் நெட் பேக் போடுவோம், நமக்கு தகுந்தவாறு, நெட்ஒர்க்குக்கு தகுந்தவாறு, பணத்திற்கு தகுந்தவாறு, நாளொன்றுக்கு 2ஜிபியோ 1.5ஜிபியோ அல்லது 1ஜிபியோ, 28நாட்களுக்கோ 56நாட்களுக்கோ அல்லது 84நாட்களுக்கோ என்று நமது விருப்பத்தின்படி. குறிப்பாக அப்படி போட்டபின் டேட்டாவை நாம் பயன்படுத்த தொடங்குவோம். எப்படியும் இன்றைய நாட்களில் நமது மொபைல் தேவைகளுக்கு அந்த டேட்டா பத்தாமல்தான் போகும் பெரும்பாலும் சீக்கிரமே தீர்ந்தும்விடும், பிறகு யாரிடமேனும் ஓசியில் வைஃபை பிச்சையெடுத்தும் தொடர்ந்து நோண்டிக்கொண்டிருப்போம். இது பொதுவாக பெரும்பாலோனோர் தினந்தோறும் செய்யக்கூடிய நிகழ்வுதான். சிலர் தங்களது பெற்றோரின் போனிலும் ஹாட்ஸ்பாட்டின் வாயிலாகவும் நோண்டுவதுமுண்டு. இதெல்லாம் எல்லாரும் செய்வதுதான், எல்லாருக்கும் தெரிந்ததுதான் பின்னே நான் எதற்கு இவைகளை இப்பொழுது சொல்லி படிக்கின்ற உங்களை கொடுமை செய்கிறேன் உங்களது டேட்டாவை தேவையில்லாமல் வீணடிக்கிறேன் என்றுதானே தோன்றுகிறது உங்களுக்கு, சொல்லுகிறேன்.

சுவர்

படம்
"சுவர்  என்பது வழக்கமாக ஒரு இடத்தை அல்லது வெளியை வரையறுக்கின்ற அல்லது அதனைப் பாதுகாக்கின்ற ஒரு அமைப்பாகும். சரிவான நிலையில் அமைந்த சுவர்களும் இருந்த போதிலும் சுவர்கள் பொதுவாக  நிலைக்குத்து  அமைப்புகளாகும். மிகப் பொதுவாக, சுவர்கள்  கட்டிடங்களினுள்  இடத்தைப் பல்வேறு அறைகளாகப் பிரிப்பதுடன், கட்டிடத்தின் உட்பகுதிகளை வெளிப்புறப் பகுதிகளினின்றும் பிரிக்கின்றது. கட்டிடங்களுக்குரிய அல்லது வேறு நடவடிக்கைகளுக்குரிய நிலப் பகுதிகளை வரையறுத்துப் பாதுகாப்பதற்கும் சுவர்கள் அமைக்கப்படுகின்றன. பெரிய  நாடுகளின்  பாதுகாப்புக்காக ஊடுருவல்களைத் தடுப்பதற்கும் சுவர்கள் அமைக்கப்படுவதும் உண்டு. புகழ் பெற்ற  சீனப் பெருஞ் சுவர் , இப்பொழுது அகற்றப்பட்டுவிட்ட  பெர்லின் சுவர்  என்பன இவ்வாறான சுவர்களுக்கு எடுத்துக்காட்டுக்கள் ஆகும்." 👆 இது விக்கிபீடியாவில் "சுவர்" என்ற தலைப்பில் பதிவிடப்பட்டுள்ள பதிவின் முதல் பத்தியாகும். இணைய முகவரி: https://ta.wikipedia.org/wiki/சுவர்  ஆனால் இதனை நான் இந்நாட்களில் பதிவிட வேண்டிய அவசியம்தான் என்னவோவென்று உங்களுக்கு தோன்றலாம், சொல்கிறேன். பொதுவாக கட்டிடமோ அ

மீண்டுமொருமுறை, நான் ___

படம்
"மீண்டுமொருமுறை நாம் எதற்கும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகிக்கொள்வோமா, நாமிருவரும் எவ்விததொடர்பற்று வெகுதூரம் போய்விட்டோம் நம்மொருவரைவிட்டொருவர்*. இச்சிறுதுகால இடைவெளியில் நமக்கிடையேயான அந்நியோன்னியமானது குறைந்திருக்கலாம், புரிதல் குறைந்திருக்கலாம் அல்லது நம்மைப் பற்றிய நினைவுகளே நம்மிருவருக்கும் குறைந்திருக்கலாம். நமக்கிடையேயான உரையாடலின் தன்மைகள் மாறியிருக்கலாம் மேலும் நம்மிருவருக்குமேயான உரையாடலின் வார்த்தை பிரயோகத்தின் அர்த்தங்களை நாம் மறந்திருக்கலாம் அல்லது மாற்றியிருந்திருக்கலாம். ( * - நம்மொருவரைவிட்டொருவர் என்பதை முதலில் 'நம் ஒருவரை விட்டு ஒருவர்' என்பதாகத்தான் தட்டச்சு செய்தேன் பின்னர் இப்பொழுதுதான் ஒருபெரும் நீண்ட இடைவெளிக்குப்பின் நாம் இணைந்திருக்கின்றோம், மீண்டும் எதற்காக இடைவெளி என்று சேர்த்துவிட்டேன்.) எனவேதான் சொல்கிறேன் நாமிருவரும் ஒருவருக்கொருவர் மீண்டும் அறிமுகம் ஆகிக்கொள்வோமா?", . . . . . . . என்று இப்பதிவை முடிக்கலாம் என்றிருந்தேன். . . . ஆனால் "ஆம், நாமிருவரும் ஒருவருக்கொருவர் எவ்வித தொடர்பற்று கொண்டிருந்தோம் தான், ஆனாலும்