இடுகைகள்

ஜூன், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆயிஷா

படம்
மதுரையில் நடந்த புத்தகத் திருவிழாவில் நான் என் Budgetக்குள் அடங்கியவாறு இரா.நடராசன் எழுதிய 'ஆயிஷா' என்னும் புத்தகத்தை வாங்கினேன். பின்னாளில் அவர் 'ஆயிஷா இரா.நடராசன்' என்றே அறியப்படுகிறார், இந்த விஷயம் எனக்கு முன்னரே தெரியும் இன்னும் அந்த புத்தகம் எதைப்பற்றியதுமெனகூட முன்னமே தெரியும். இன்றுதான் நான் முழுவதுமாக புத்தகத்தை படித்து முடித்தேன், வெறும் 20நிமிடங்களே ஆனது முழு புத்தகத்தையும் படித்து முடிக்க அவ்வளவு சிறிய புத்தகம். ஆனால் இது உணர்த்திய கருத்துக்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் அளப்பரிய முடியாதது, முடிந்தால் நீங்களும் படித்துப்பாருங்கள். இந்தகால சூழ்நிலைக்கேற்ற அருமையான புத்தகம். ஏனென்றால் 'ஆசிபா'க்கள் 'ஆயிஷா'க்களாகமலும், 'ஆயிஷா'க்கள் 'அனிதா'க்களாகாமலும், 'அனிதா'க்கள் 'டாக்டர்'களாகாமலும் நசுக்கப்பட்டும் பொசுக்கப்பட்டும் கொண்டிருக்கின்றனர்.!

ஆதிக்கம்

படம்
       பெண்ணைவிட ஆணே உயர்ந்தவன் என்பவன் ஆணியவாதி, ஆணுக்கு பெண் சரிநிகர் என்று ஒருவன் சொன்னாலே அவன் இக்காலத்தில் பெண்ணியவாதியாக(Feminist) பார்க்கப்படுகிறான். உண்மையில் ஆணைவிட பெண்ணே உயர்ந்தவள் என்று சொன்னால்தானே அது உண்மையான பெண்ணியவாதம் ஆகும்?        அந்த நிலைக்குக்கூட பெண்ணியத்தை போகவிடாமல் சமம் என்ற இந்தநிலைலேயே கட்டுப்படுத்தி வைத்திருப்பதேகூட ஒரு ஆணாதிக்கம் என்று யோசித்து பார்க்க தோன்றுகிறது.!

முதல் குறிப்பு

படம்
நான் இவ்வலைப்பூவினை ஒரு பரீட்சார்த்த முறையில் தொடங்கி, தொடர்ந்து எழுதிவரலாம் என்ற எண்ணத்தில் ஆரம்பித்துள்ளேன். எனவே வாசகர்கள் தங்கள் மேலான ஆதரவை எனக்கும் தந்து, தொடர்ந்து எழுதும்படி உற்சாகம் தரும்படியும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.! நன்றி.!