இடுகைகள்

ஏப்ரல், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஞாபகங்கள்

படம்
Whatsappல் என்றைக்கோ என்னுடைய Dareன் நிமித்தம் DPயாக நீ சற்றுநேரம் வைத்திருந்தபோது உனக்கேத்தெரியாமல் நான் Save பண்ணின உன் Photoவைத்தான் இன்றுவரை பார்த்து ஆறுதல்பட்டுக் கொண்டிருக்கிறேன், எனக்கு உன் ஞாபகம் வரும்போதெல்லாம்.! ~ ஞாபகங்கள்  ♥  ~

புல(னாகாத)னம்

படம்
நான் Busyயாயிருப்பேன் என்று நீயும், இல்லை நீ Busyயாயிருப்பாய் என்று நானும் நினைத்துக் கொண்டோமாயென்ன, என்னுடைய பல பத்திப்பத்தியான Messageகளும் உன்னுடைய பல ஒற்றை 'ம்'(mmm)களும் & சில OKகளும் இல்லாமல் சில மாதங்களாக உன்னுடனான என் WhatsApp Chatடானது வெறிச்சோடிப்போய்க் கிடக்கிறது.! ~ புல(னாகாத)னம்  ♥  ~

'இன்னொருவனாய்'

என் நெடுநாளைய தேடலின்முடிவில், 'என்னைப்போல் ஒருவனாய்' யாருமே இங்கில்லை  என்றெண்ணி நடப்பதையெல்லாம் பார்த்துப்பின்  குறைந்தபட்சம் நான் 'ஒருவனாய்'  அநியாயத்தை தட்டிக்கேட்கும் 'தனி ஒருவனாய்',  அநீதிகளையும் 'உன்னைப்போல் ஒருவனாய்', தவறுகளை திருத்தும் 'எவனோ ஒருவனாய்' இருக்கவேண்டுமென்று விழைந்தாலும்  வாழ்க்கையென்னமோ 'ஆயிரத்தில் ஒருவனாய்' மிகச்சாதாரணமாக என்னையும் 'எனக்குள் ஒருவனாய்'  வெறும் கனவுலகில்மட்டுமே அப்படி வாழவைக்கிறது.!