இடுகைகள்

நவம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சில நேரங்களில் சில மனிதர்கள்

படம்
ஏனோ எனக்கு தெரியவில்லை இத்தலைப்பிட்டதற்கும் நான் சொல்லவருவதற்கும் நேரடித்தொடர்பு உள்ளதா, இல்லை வெறுமனே இதுவொரு வெற்றிபெற்ற (அ) கவர்ந்தீர்க்கக்கூடிய தலைப்பாதலாலோ இட்டிருப்பேனா என்று உறுதியாக தெரியவில்லை. குறைந்தபட்சம் இத்தலைப்பிற்கு கொஞ்சமாவது அர்த்தம்சேர்க்கும் வகையிலாவது இப்பதிவு இருக்குமென்று நம்பி, ஆரம்பிக்கிறேன். "எப்போதும்போலில்லாமல் சில நேரங்களில் சில மனிதர்கள், நமக்கு வித்தியாசமாகித் தெரிவார்கள். ஏன் எதற்கு எப்படி என்று தெரியாமலேயே நமக்கும் அவர்களது அவ்வித்தியாசம் சட்டென பிடித்துப்போய்விடும். அவர்களது குணமாக அது எப்போதுமே இருந்திருக்காது, ஆனால் ஏனோ திடீரென நாம் எதிர்ப்பார்த்திருக்காத வேளையிலே அவர்களது அந்நேரத்தைய சிறுமாற்றமானது நாம் அவர்கள்மீது நினைத்து வைத்திருந்த ஒட்டுமொத்த பிம்பத்தை அப்படியே திருப்பியும்கூட போட்டுவிடும். உதாரணத்திற்கு, எப்போதும் நம்மை கரித்துக்கொட்டிக் கொண்டிருக்கும் அப்பா நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, நமக்கு திடீரென விக்கலெடுக்கையில் நாம் கேட்காமலேயே தண்ணீர் கொண்டுவந்து தருவது. வகுப்பில் ஆசிரியர் நின்று  பாடமெடுத்துக் கொண்டிருக்கையில் முன்ப