இடுகைகள்

பிப்ரவரி, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாட்டி சொல்லைத் தட்டாதே

படம்
மிகவும் நெருங்கிய ரத்த சொந்தமான ஒருவரது திருமணத்திற்கு என்னையையும் சேர்த்து எங்கள் வீட்டில் எல்லாருக்கும் புதுத்துணி எடுக்க கிளம்பலாம் என்று எல்லோரும் புறப்படும் வேளையில், என் தாய் அப்போது நானணிந்திருந்த உடையை மாற்றிவிட்டு வேறொரு நல்ல ஆடையுடுத்தி வரும்படி கூறினார்கள் (என்னுடைய ட்ரெஸ்ஸிங் சென்ஸ் பற்றி என்னை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும், அப்படி ஒன்று என்னிடம் இல்லையென்று).  அதற்கு நான், "ஏம்மா இதுக்கு என்ன குறைச்சல் நல்லாத்தானே இருக்கு, நீங்க எடுத்து குடுத்ததுதானா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கண்றாவியா இருக்கு சகிக்கல, நாம போட்டுப்போற டிரெஸ்ஸே கடைக்காரனுக்கு காட்டிக்குடுத்துரும் நாம வாங்குவோமா மாட்டோமா எப்படிப்பட்டவங்கனு, காஸ்ட்லியான டிரெஸ்ஸ கண்ணுலகாட்டவே மாட்டாங்க, ஒழுங்கா போய் மாத்திட்டுவான்னா வா" என்றார்கள். உடனே நான், "Dont judge a book by its coverனு பழமொழியிருக்கே, ஒன்ன வாங்குறதும் வாங்காம போறதும் நம்ம இஷ்டம்தானம்மா, இதுல நம்ம டிரஸ் நம்மள என்னாப்பண்ணுச்சு, எவ்ளோ காஸ்ட்லினாலும் புடிச்சிருந்தா நாம வாங்கத்தான போறோம்" என்றேன். "அதெல்லாம் தெர
நெடுநாளாய் ஒரு கதாபாத்திரத்தை எனக்கு பிடித்தமாதிரி வடிவமைத்து, அப்பாத்திரத்தை முன்னிறுத்தி ஒரு கதையெழுத வேண்டுமென்ற என்னுடைய எண்ணம் இப்போதுதான்  கைகூடியுள்ளது. அக்கதாப்பாத்திரத்தை இப்போது ஒரு 12 அல்லது 13 வயது சிறுவனாக முதலில் படைத்துத் துவக்குகிறேன். கதையின் போக்கில், இடையில் அச்சிறுவன் சிறுமியாகலாம் ஆணாகலாம் பெண்ணாகலாம் யாராகவும் ஏதுவாகவும்கூட ஆகலாம். இப்போதைக்கு இவனது பாத்திரமானது சமூக அவலத்திற்கு எதிரான so called முற்போக்கான, எல்லாவற்றையும் இவ்வயதிலேயே புரிந்துகொள்ளக்கூடிய, பல '_ist'க்களின் கொள்கைகளை அறிந்திராத ஆனால் அவற்றை தெரியாமலேயே கைக்கொள்ளுகிற ஒருவன் (எழுதுகிற எனக்கே சரியாகத்தெரியாது பலரது கொள்கைகளை). இந்த சிறுவனுக்கு நான் ஏதோ ஒரு பெயரையிட்டு அதன்மூலம் அவனுக்கு ஜாதிமத ரீதியிலான சாயம் பூசப்படுவதை நான் விரும்பவில்லை, ஏன் அவனுக்கேக்கூட அது பிடிக்காது. வேண்டுமானால் அவனுக்கு யூடியூபில் தமிழில் புகழ்பெற்று விளங்கும் கோவையை சார்ந்த அரசியல் நையாண்டி சேனலான 'நக்கலைட்ஸ்'ஸின் ஆஸ்தான நாயகியான 'ஸ்ரீஜா'க்கு ஒருவேளை ஒரு தம்பியிருந்தால் எப்படியிருப்பானோ, அப்படி ஒ

நகைமுரண்

நான் எனக்குள்கண்ட அதே ஒருசிறு பெண்மையை ஒவ்வொரு ஆணிற்குள்ளுமிருந்து வெளிக்கொணரும் பொழுதெல்லாம், நானடைந்த வெற்றியைக் கொண்டாட என் ஆண்மை என்னை தடுக்கிறது.!

ஆறாத காயங்கள்

படம்
கடைவீதியில், பக்கத்துக்கு வீட்டில், எதிர்ப்படும் வாகன முகப்பில், பொருள்வாங்கிய கடையில், செய்தித்தாளில், டீவி ஷோவில், சாராயக்கடையில், யூடியூபில் இன்னும் எங்கெங்கெல்லாமோ அவளது பெயர் கண்ணில்பட்டாலும் இவையாவற்றை விடவுமே, மிக அதிகமாகக் காயப்படுத்துகிறது என்னை அவள் பெயரானது, 'அவளது கல்லறையில்'  நான் பார்க்கின்ற பொழுதெல்லாம்.!

'ங்'கும் கொங்கும்

படம்
"ங்ங்ங்....கா" "ங்ங்ங்...கா சொல்லு ங்கா" என்று என் தாய் நான் மழலையாக இருந்தபொழுது பேசச்சொல்லிப் பழக்கிய 'ங்'தான் 'ம்ம்ம்...மா' தவிர்த்து நானாக பேசிப்பழகிய முதல் வார்த்தை என்று நினைக்கிறேன். கோவையும் அதனைசுற்றியுள்ள கொங்கு மண்டலம் எனப்படுக்கிற நிலப்பரப்பிலேயே இவ்வெழுத்தானது ஒன்றிவிட்டதாகத்தான் பார்க்கிறேன். மேலும் இவ்வெழுத்தே இம்மண்டலத்திற்கானதாக மட்டும்தான் உள்ளதாகப்பார்க்கிறேன். மரியாதையான ஊர், மரியாதையான மக்கள் & மரியாதையான மொழி என்றெல்லாம்  அழைக்கப்படுவதற்கும் இவ்வெழுத்திற்கே பெரும்பங்குள்ளது என்பதும் என் எண்ணம் என் கருத்து எல்லாமே. ங்கோவ், ஏனுங், வாங், போங், இல்லீங், ஆமாங், சரிங், தப்புங், Etc இப்படி 'ங்'கு இல்லாமல் இங்கு தமிழை யாராலும் பேசவேமுடியாது.  இவ்வெழுத்தின் உச்சரிப்பின் ஓசையில்கூட ஒருசிறு இசை நயமும் உள்ளதோ எனும் ஐயமும் எழுகிறது. முடிவாக கொங்கும் 'ங்'கும் ஒன்றையொன்று நன்றாக பிண்ணிப்பிணைந்துள்ளது என்பது மட்டும் புலனாகிறது. இது உண்மையிலேயே மென்மையான 'மெல்லின மெய்'தான் என்பதும் மெய்யாகிறது.! கு

எண்ணத்தின் தோன்றல்கள்

படம்
சமூகவலைதளங்களிலோ அல்லது தன் முகநூல் பதிவேட்டிலோ 'நான் இப்படித்தான் என் விருப்பப்படி இருப்பேன், இப்படித்தான் அமருவேன், இப்படித்தான் உடையுடுத்துவேன், இப்படித்தான் சிகை திருத்தம் பண்ணிக்கொள்வேன், இப்படித்தான் மூக்குத்தி குத்திக்கொள்வேன், யாராகயிருந்தாலும் எதுவானாலும் எனக்கு பிடித்தவனைத்தான் மணப்பேன் அல்லது எவனையாவது எனக்கு பிடிக்கும்வரை மணம்புரியமாட்டேன்', இப்படியான தன் சுயம் சார்ந்த சுயவிருப்பப் பதிவுகள் போட்டிருக்கும் எனக்குத்தெரிந்த ஒருசில பெண்களின் காலக்கோட்டில் இப்பொழுதோ அல் லது முன்னர் எப்பொழுதோ அவர்களால் போடப்பட்டிருக்கும் பதிவுகளுக்கு எதிர்ப்பு, மறுப்பு, வேதனை தெரிவித்து வந்த கருத்துக்களையெல்லாம் ஓரங்கட்டிவிட்டபின், ஆதரவாக பதிவிட்டிருந்த ஆண்களின், அவளை அவள் இஷ்டத்திற்கு, 'நீ, உனக்கு தோன்றியபடியெல்லாம் செய்' என்றோ 'அது உனது விருப்பம்' என்றோ 'நோ பிராப்ளம்' என்றோ 'உன் சுதந்திரம்' என்றோ 'நீ நீயாகவே இருமா' என்றோ வந்த இதுமாதிரியான கருத்துக்களைமட்டுமே படித்துப்பார்த்தபின் எனக்கு தோன்றியது, அவளுக்கு அந்த உரிமையையளிக்க அல்லது அ

நான் சிலாகிக்கும் நீ

படம்
உன்னைப்போல எனக்கு நம்மிடையேயான, 'பஸ்ஸில் நாம் ஓடிப்போய் சீட்டுபோட்டுவிட்டு நமக்குள் போட்டுக்கொண்ட ஜன்னலோரசீட்டுச் சண்டை', 'ஆளாளுக்கு அவரவருக்குப் பிடித்தபடம் பார்க்க சண்டையிட்டுப்பின் ஒன்றாக பார்த்துவந்த மொக்கைப்படம்', 'பெட்ரோல் தீர்ந்து ஒன்றரை கிலோமீட்டர் ஓசி பைக்கை தள்ளிட்டுப்போய் நாம் சாப்பிட்ட ஐஸ்க்ரீம்', 'மாலுக்கு ஷாப்பிங்க்கு போய் பணம்பத்தாமல் இங்கயெல்லாம் காஸ்ட்லின்னு சொல்லி நழுவிட்டுவந்து, பிளாட்பாரக்கடையில் இருவரும் மேட்ச்சாக எடுத்த டிரஸ்' இதுபோன்ற ஒவ்வொரு சின்னச்சின்ன விசயத்திலும் ஔிந்திருக்கும் சந்தோஷ ஞாபகத்தருணங்களை அவ்வளவு அழகாக உணர்ந்து ரசித்து அனுபவித்துச் சொல்லத்தெரியாது, மேலும் உன்னைப்போல ரசனையாக வார்த்தையிலும் வடித்தெழுத தெரியவேத்தெரியாது. ஆனால் எனக்கு ஒன்றுமட்டும் நிச்சயமாக சொல்லத்தெரியும், உன்னுடைய இவ்வாறான ஒவ்வொரு சின்னசின்ன சிலாகித்தலையும்கண்டு நான் எனக்குள் சிலாகித்துக் கொள்கிறேனென.! ~ நான் சிலாகிக்கும் நீ  ♥  ~

குறிப்பறிதல்

படம்
நீ உன்னுடைய Whatsapp Status Privacyல் Only Share Withன் மூலமாகவும் Facebook Add To Storyல் Share With Specific Friendsன் மூலமாகவும் நான்மட்டுமே காணவேண்டுமென, சொல்லாமக்கொள்ளாமல் எனக்கென்று வைத்திருந்த உன்னுடைய அந்த Statusசும் Storyயும் பார்த்து இஃது என்மீதான & எனக்காய்மட்டுமான உன் அன்பின் வெளிப்பாடென, நான் குறிப்பாலறிந்த தருணத்திலுணர்ந்தேன் நீ எனக்குமட்டுமேயானவளென்று.! ~ குறிப்பறிதல்  ♥  ~

முழுமையற்

படம்
என்னுடைய பல பதிவுகள் பாதியிலேயே கைவிடப்பட்ட மன்னிக்கவும் விசைப்பலகையிலிருந்து எனது கை விடப்பட்ட நிலையிலேயே  முழுமையாக  தட்டச்சுப்பண்ணப்படாமலேயே  அங்கேயே அப்படியே அரைகுறையாக கிடக்... ~ Incomplet...  ♥  ~