இடுகைகள்

ஜனவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்த எண்ணத்தைத்தான் மாத்துங்களேன்

படம்
"ஓரிருவாரம் வெளியூர் பயணம்போகும் கணவனுக்கு, கண்ணீரோடு பிரியாவிடை கொடுத்தாள் புதுமணப்பெண் தன்னுயிர்த்தோழனின் தோளில் சாய்ந்தபடியே.!" இக்கவிதையானது நான் (2008ல் ) +2 படித்துக்கொண்டிருக்கும்போது, என் நண்பனொருவன் வாங்கிவந்த 'நட்புக்கவிதைகள்' எனும் வண்ணப் படங்களுடன்கூடிய சிறுசிறு நண்பர்கள் மற்றும் நட்பைத் பற்றிய ஒரு பத்திருபது கவிதைகளைக் கொண்ட ஒரு குட்டிபுத்தகத்தில் வாசித்தது. யார் எழுதியது என்றெல்லாம் இப்போதுவரை தெரியாது, இன்றும் அப்படியே மனதில் பதிந்துள்ளது. இது இப்படியே என்னுள் பதிந்துபோகவும் காரணம், நட்பு & நண்பர்கள். யாருக்குத்தான் நட்பையும் நண்பர்களையும் பிடிக்காமல் போகாது, மேலும் அப்போதெல்லாம் இந்த 'BESTIE' எனும் வார்த்தையுமில்லை அம்மாதிரியான கேவலமான வழக்கமுமில்லை. நட்புக்குள் அன்போடுகூடிய மரியாதையும் இருக்கும், அது பரிசுத்தமாயும் அர்த்தமுள்ளதாயும் இருக்கும் மிகவும் ஆழமுள்ளதாயும் இருக்கும். எனக்கும்கூட அப்போது, இக்கவிதையில் குறிப்பிட்டுள்ளதுபோன்றதொரு நெருங்கிய உயிர்தோழிகள் ஒருசிலர் இருந்தனர். இப்போது அதனைவிடவும் அதிகமான எண்ணிக்கையிலும் அதனைவிட ஆத்ம