இடுகைகள்

பிரியமுடன் பிரியாவிடை

படம்
  “ஊரு ஒலகத்துல இருக்குற யார்யாருக்காகவோ Write -Up எழுதுறியே, உன் பிரண்ட் நானு, எனக்கு ஒன்னு எழுதணும்னு தோணுச்சாடா உனக்கு?”, என்று உரிமையோடு இப்படி என்னிடம் செல்லமாக கோபித்துக்கொள்ளுமளவு பிரியத்திற்கு சொந்தக்காரியானவளுக்கு.... ‘ K. தாமரைச் செல்வி’, இப்பெயரை 2008 -இல் ஆகஸ்ட்டு மாதத்தின் மூன்றாவது வாரத்தின் ஒரு நன்னாளில், பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கலை அறிவியல் கல்லூரியின் புத்தகச் சாலையில் B.Sc. Computer Science – Aided (2008-2011) என்று முகப்பில் ஒட்டியிருந்த ஒரு நோட்டில் கண்டபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அப்போது அளவேயில்லை. ஒரு பெயர் என்னை ஏன் இவ்வளவு மகிழ்ச்சிக்குள்ளாக்கியது என்று படிக்கிற எவருக்கும் ஒரு கேள்வி எழலாம். பின்னர் இருக்காதா, இனிமேல் பார்த்துக்கொள்வோமா மீண்டும் நட்பினை தொடர இனியேதும் வாய்ப்பு இருக்குமா என்று நினைத்து ஒருவருக்கொருவர் பரஸ்பரம் விடைபெற்றபிறகு மீண்டும் அதேப்பெயரானது 4 ஆண்டுகள்கழிந்து கண்ணில்பட்ட மகிழ்ச்சிதான் அது. இன்னும் நன்றாகவே நினைவிருக்கிறது, 2004 -ஆம் ஆண்டு மே மாதத்தின் தொடக்க வாரத்தில், பொள்ளாச்சி புனித லூர்து அன்னை நடுநிலைப் பள்

நானும் சில பெண்களும் - 1

படம்
  ஒரு 17 வயது சிறுமி, தான் முதன்முதலாக அவளாகவே தன்னந்தனியே தைரியமாக வெளியே சென்றுவந்ததைப் பற்றி புலங்காகிதம் அடைந்து சிலாகித்து உங்களிடம் எப்போதேனும் கூறியிருக்கிறாளா என்று எனக்குத் தெரியாது, ஆனால் என்னிடம் ஒருமுறை ஒரு சிறுமி* கூறியிருக்கிறாள், “இன்னைக்கு நானே தனியா வெளிய போய்ட்டு வந்தேன். அப்பா எங்கையோ வெளில வேலையா போய்ட்டதால நானே காலேஜ்ல இருந்து தனியா பஸ் ஏறி, இங்க இறங்கி ரொம்ப பசிச்சுச்சுன்னு ஹோட்டலுக்கு போய், ஜூஸ் ஒன்னு ஆர்டர் பண்ணி குடிச்சுட்டு வந்தேன். இதுக்கும் அங்க பில்லு கட்டுற இடத்துல ஒரே கூட்டம், நான் பொறுத்துப் பொறுத்துப்பார்த்து கோவத்துல எவ்ளோ நேரமா நான் நிக்குறதுனு அவுங்கள்ட சத்தம் போட்டுட்டு ஆர்டர்பண்ணி அப்புறம் குடிச்சுட்டு வந்தேன், எல்லாரும் என்னையவே பாத்தாங்க. நான் யாரையும் கண்டுக்காம குடிச்சுட்டு வந்துட்டேன்.” என்பதாய் கூறினாள். கூறிய விசயத்தை விட கூறிய விதத்தில் அவ்வளவு ஆச்சரியம் அவளது கண்களில் நான் பார்த்தேன், இதற்கும் முதன்முதலில் இதனை பகிர்ந்து கொண்டதும் என்னிடம்தான். ( * - இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி 18 வயதிற்கு கீழுள்ள அனைவருமே சிறுவர் சிறுமியர் தான், இன்

நினைவில் நின்றவர்கள்

படம்
  நாம் எல்லோருமே நம்முடன் மிகவும் நன்றாக நெருங்கிப் பழகி, பின் ஏதோவொரு சந்தர்ப்ப சூழ்நிலையால் நம்மைவிட்டு பிரிந்துபோன எவரையோ மீண்டும் குறைந்தபட்சம் ஒருமுறையேனும் கண்டுவிட மாட்டோமா என்கிற ஏக்கத்தில் தேடியிருப்போம் அல்லது இப்போதும் தேடிக்கொண்டிருப்போம். அவர்கள் நமது பள்ளி அல்லது கல்லூரிப்பருவ நண்பர்களாக இருக்கலாம், அண்டை வீட்டுக்காரர்களாக இருக்கலாம், அலுவலக நண்பர்களாக இருக்கலாம், இன்னும் சொன்னால் பயணத்தில் நம்முடன் கூடப்பயணித்த சகப்பயணியாகக் கூட இருக்கலாம். அதாவது இன்றைக்கு மேம்பட்ட இணைய வசதி இருந்தாலும் அவர்களை தேடும் அளவிற்கு நம்மிடம் அவர்களது நினைவுகளைத்தவிர அவர்களைப் பற்றிய பெரிய அளவிலான தகவல்கள் இல்லாமலும் இருக்கலாம். அப்படி நான் சமீபத்தில், ஒரு பெண் அவருடன் சிறுவயதில் படித்த அவரது தோழியை தேடிக்கொண்டிருப்பதாக அவரது முகநூலில் பதிவிட்டிருந்ததை பார்த்தேன். அப்பெண்ணிடமும் அவர் தேடக்கூடிய தோழியைப் பற்றிய பெரிய தகவல்கள் ஏதும் இல்லை. இதனை நான் ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், நானும் அப்படிப்பட்ட இருவரை வெகுநாட்களாகத் தேடிக்கொண்டிருக்கிறேன். என்னிடமும் அவர்களது நினைவுகளைத் தவிர தேடிக் கண்டுபிட

மாற்றமில்லை

படம்
எங்கெங்கோ தனித்தனியாக இருந்தாலும் என்னென்னவாகவோ நாம் மாற்றமாகிப் போயிருந்தாலும், ஆண்டுகள்கூட பலவாகி போயிருந்தாலும் நீயும் நானும் நேரில் இனி முகமுகமாக பார்த்துக் கொள்ள முடியாதே போகும் சூழல் வந்தாலும்கூட,  புலனம் எனப்படும் Whatsapp Chatடில் என்றுமே மாறாத, நம்மிருவருக்கும் இடையே இன்றும் புலனாகாத ஒரேயொரு ஒற்றுமையான விஷயம் யாதெனில், நீயோ நானோ ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள எத்தனித்து நாமிருவரும் Onlineனில் இருக்கும் போது எவர் முதலில் Chat செய்ய ஆரம்பித்தாலும் Hai, Hi, GM, GE, Etc.. இப்படி அனுப்பாமல் நேரடியாக செய்தியை அனுப்புவதும், 'typing...'னு மற்றவருக்கு காட்டும் போதெல்லாம் அவர் தானாகவே Offline செல்வதுமேயாகும். எங்கே நாம் சொல்ல வருவதை நம்மால் முழுமையாக  அதே நினைப்போடு அதே உயிர்ப்போடு சொல்ல முடியாமல் போய்விடுமோ என்று நமது உரையாடல்களில் ஒவ்வொரு Messageக்கும் இடையே நான் உனக்கும் நீ எனக்கும் கொடுத்துக் கொள்ளக்கூடிய அந்த ஓரிரு நிமிட Offline கருத்துச் சுதந்திர இடைவெளிகளில் எப்போதுமே மாற்றமிருந்ததில்லை.!   ~  மாற்றமில்லை   ♥  ~

சும்மா பேருக்காக...

உங்களது பெயரே என்றைக்கேனும் உங்களுக்கு கோபமூட்டியுள்ளதா? உங்களது பெயரானது உச்சரிக்கப்பட்டதால் என்றைக்கேனும் கோபம் அல்லது வருத்தம் அடைந்துள்ளீர்களா? இங்கு நான் குறிப்பிடுவது, தமது பெயர் பிடிக்காமல் வருவதால் ஒருவருக்கு வரும் கோபத்தை வருத்தத்தைப் பற்றியோ, சாதி மத ரீதியிலான காரணத்தால் வரும் கோபத்தை வருத்தத்தைப் பற்றியோ அல்ல, மாறாக நமக்கு பிடித்த பெயரே நமக்கு இவ்வாறான உணர்வுகளை தருவதை பற்றியது. மனதுக்கும் உணர்வுக்குமான தொடர்பிலிருந்து இதனை வேறொரு கண்ணோட்டத்தில் கொஞ்சம் அணுகிப்பார்ப்போம். "என்னுடைய முழுப்பெயரை என் வாழ்நாளின்  கடைசிவரை உச்சரிக்காத உச்சரித்தும்விடாத ஒரு நண்பரை வேண்டுவதேயென் வேண்டல்.!" இக்கவிதையை படித்தவுடனே தங்களுக்கு என்ன தோன்றியது, என்னமாதிரியான உணர்வு வந்தது? ஒரு சிலருக்கு ஒரு மாதிரியாகவும் இன்னும் சிலருக்கு வேறு மாதிரியாகவும் வேறு சிலருக்கு பல மாதிரியாகவும் தோன்றியிருக்கும் முதலில் இது கவிதையா என்றேக்கூட உங்களில்  நிறையபேருக்கு சந்தேகம் தோன்றியிருக்கலாம். ஆம் இது ஒரு கவிதைதான், நம்புங்கள் ஏனென்றால் இதனை நான் எழுதவில்லை, ஆகவே நீங்கள் என்னை தாராளமாக நம்பலாம்.  நல்ல

இதயத்தின் வேண்டல்

படம்
குறிப்பு 1: நமது உடலில் 12 இணை விலா எலும்புகள் உள்ளன, அதாவது மொத்தம் 24. அதில் முதல் 7 இணைகள் உண்மை விலா எலும்புகள் அடுத்த 3 இணைகள் போலி விலா எலும்புகள் அடுத்த & கடைசியான 2 இணைகள் மிதக்கும் விலா எலும்புகள். குறிப்பு 2: "தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார். அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான். இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்." ஆதியாகமம் - 2: 21 - 24 குறிப்பு 3: திறந்த இதய அறுவை சிகிச்சை செய்யப்படும்போது, செய்யப்படும் நபரின் இதயத்தை ஒட்டியுள்ள ஒன்றிரண்டு விலா எலும்புகள் உடைக்கப்படும், அப்போதுதான் முழுமையாக அச்சிகிச்சையை சிறப்பாக செய்யமுடியும

எழுதுகோல் தந்த தூண்டுகோல்

கிரியாவூக்கி அல்லது காரணகர்த்தா இரண்டு வார்த்தைகளுமே ஏறக்குறைய ஒரே அர்த்தத்தை பிரதிபலிப்பதாகத் தான் தெரிகிறது, இரண்டிற்கும் பொருள் ஏதோ ஒன்று நிகழ அல்லது உருவாக காரணமான ஒன்று, இன்னும் தெளிவாக சொல்லப்போனால் இதன் விளைவாக உண்டான ஒரு முடிவு. இருப்பினும் கிரியாவூக்கி என்பது அஃறினைக்கும் பொருந்தும் அதாவது ஒரு சம்பவமோ, ஒரு எண்ணமோ, ஒரு சொல்லோ இன்னமும் ஏதுவாகவோகூட இருக்கலாம்.  காரணகர்த்தா என்பது உயர்திணைக்கு மட்டுமே பொருந்தும் கண்டிப்பாக ஒரு நபராக அல்லது ஒன்றிற்குமேலுள்ள நபர்களாக மட்டுமே இருப்பர். முதலில் 'காரணகர்த்தா' எனும் இவ்வார்த்தை உருவாக காரணமாக இருந்த காரணகர்த்தா நம் கர்த்தர் தான் என்பது என் கருத்து. கர்த்தர் தான் காரணம் என்கிற பதம்தான் இவ்வாறாக மாறியிருக்கிறது, ஆதலால் தான் காரணகர்த்தா என்கிறோம். உலகிலுள்ள அனைத்தையுமே உருவாக்கியவர் கர்த்தர் மேலும் இந்த உலகத்தையே உருவாக்கியவரும் அவர்தான். வேண்டுமானால் ஏதேனும் தேடுபொறியில் காரணகர்த்தா பொருள் என்ன என்று தேடிப்பாருங்களேன் 'முதற்கடவுள்' என்கிற முடிவினைத் தரும். அப்படியானால் கர்த்தர் தான் முதற்கடவுள் என்பது புலனாகிறது. மேலும் &#