சாதீ 🔥
இப்பல்லாம் யார்சார் சாதிபாக்குறா?:
"நானல்லாம் சாதி பாக்குற ஆளில்ல, அப்படிப்பாத்தும் பழகுற ஆளில்ல, என் நண்பர்கள்லாம் எந்த சாதினு எனக்குத் தெரியாது, நானும் அதல்லாம் தெரிஞ்சிக்கவும் மாட்டேன்" என்று நம்மில் ஒருசிலர் பெருமையாகக் கூறக்கேட்டிருப்போம், ஏன் நம்மில் ஒருசிலர் இப்படி பெருமை பேசியேக்கூடவுமிருப்போம்.
ஆனால் என்றைக்கேனும் நாம் இப்படி யோசித்திருப்போமா, மேற்குறிப்பிட்டதுபோல பேசிய நபரோ அல்லது பேசிய நாமோ நிச்சயமாக So Called ஆண்ட பேண்ட என அழைக்கப்படும் ஏதோவொரு ஆதிக்கச் சமூகத்தை சார்ந்தவராகவும் பேசிய அத்தருணத்தில் கேட்பவர்களில் தெரிந்தோ தெரியாமலோ ஒருசிலராவது அவர்களது ஆதிக்கத்திற்குகீழ் உட்பட்டிருந்ததாக அவர்களால் காலங்காலமாக நம்பம்பட்டுவருகிற ஏதோவொரு சமூகத்தினை சார்ந்தவராகவும் இருந்திருப்பர்.
இதேப்போன்ற ஒரு கருத்தினை நாம் தாழ்ந்த சாதிக்காரர்கள் என்று வரையறுத்து வைத்திருக்கிறவர்களில் எவரேனும் பெருமையோடு கூறினால், அக்கூற்றினை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நம்மில் எத்துனைபேருக்குண்டு? "நீயென்னடா/டி எங்கள்ட சாதிபாக்காம பழகுறனு சொல்லுறது, அதலாம் நீ சொல்லக்கூடாது" என்று மனதில் நினைத்துக்கொள்பவர்களே அதிகம்.
நான் மனிதரில் சாதி பார்க்கமாட்டேன் என்று கூறும் ஒருவர் மதிக்கப்பட வேண்டுமானாலுங்கூட அவர் கட்டாயம் ஆதிக்கச்சாதியென்று பெருமைபேசித்திரிகிற ஏதோவொரு சாதியினை சேர்ந்தவராகத்தான் இருக்கவேண்டும்போல, இல்லையென்றால் அக்கூற்றிற்கும் அவருக்கும் மதிப்பில்லை. இல்லையென்றால் ஒருவேளை இப்படியும்கூட இருக்கலாமே, அவர், தான் ஆதிக்கச் சமூகத்தை அல்லது சாதியை சேர்ந்தவர் என்பதை சுத்திவளைத்து வேறுவழியில் பிறருக்கு மறைமுகமாக வெளிக்காட்டுவதற்குத்தான் அக்கூற்றினை கூறுவதாக்கொள்ளலாம்தானே? அப்படியில்லையென்றாலும் அதானே உள்ளர்த்தமுமாகிறது, அப்படியும்கூட இங்கு பொருந்திப்போகும்தானே.
அவ்வாறான கோணத்தில் சற்றே யோசிக்கையில், "பெண்ணியம் பேசும் ஆண்களும்கூட பெண்களை பிணமாக்கித்தான் வைத்திருக்கின்றனர், குறைந்தபட்சம் கூடலின் போதாவது" என்று யாரோ எழுதியதாக, எங்கோ எப்போதோ எதிலோ படித்ததாக ஒருகவிதை வரிதான் நினைவிற்கு வருகிறது வேலியும் ஒருவிதத்தில் பயிரை மேயத்தான் செய்யும் என்பதாக. ஏதோ நாம் போனால்போகட்டுமென்று பிறரோடு பெருந்தன்மையாக இறங்கிவந்து நட்புபாராட்டுவதுபோல நினைத்துக்கொள்கிறோம், அடிப்படையில் அதுவும் ஒருவகை ஆதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடுதான் அதுவும் தப்புதான்.
காந்தியவே அவரது சாதிப்பெயரான 'பனியா' என்பதனைசொல்லி அசிங்கப்படுத்திய ஆளும் மத்திய அரசை இப்போது கொண்டவர்கள்தானே நாம். நான் இங்கு, 'நாம்', 'நம்மில்' என என்னையும் சேர்த்துச்சேர்த்துச் சொல்வதிலுங்கூட இப்பதிவை படிப்பவர்களுக்கு என்னைப்பற்றிய ஐயம் எழலாம் இவனும் நம் சாதிக்காரனா அல்லது வேறு ஆளா இல்லை ஆதிக்கசாதிக்காரனா அல்லது ஆட்பட்டசாதிக்காரனா என்று. சொல்கிறேன்,
#நான்மனிதன் ♥
கருத்துகள்
கருத்துரையிடுக