இந்த எண்ணத்தைத்தான் மாத்துங்களேன்
"ஓரிருவாரம் வெளியூர் பயணம்போகும் கணவனுக்கு,
கண்ணீரோடு பிரியாவிடை கொடுத்தாள் புதுமணப்பெண்
தன்னுயிர்த்தோழனின் தோளில் சாய்ந்தபடியே.!"
இக்கவிதையானது நான் (2008ல் ) +2 படித்துக்கொண்டிருக்கும்போது, என் நண்பனொருவன் வாங்கிவந்த 'நட்புக்கவிதைகள்' எனும் வண்ணப் படங்களுடன்கூடிய சிறுசிறு நண்பர்கள் மற்றும் நட்பைத் பற்றிய ஒரு பத்திருபது கவிதைகளைக் கொண்ட ஒரு குட்டிபுத்தகத்தில் வாசித்தது. யார் எழுதியது என்றெல்லாம் இப்போதுவரை தெரியாது, இன்றும் அப்படியே மனதில் பதிந்துள்ளது. இது இப்படியே என்னுள் பதிந்துபோகவும் காரணம், நட்பு & நண்பர்கள்.
யாருக்குத்தான் நட்பையும் நண்பர்களையும் பிடிக்காமல் போகாது, மேலும் அப்போதெல்லாம் இந்த 'BESTIE' எனும் வார்த்தையுமில்லை அம்மாதிரியான கேவலமான வழக்கமுமில்லை. நட்புக்குள் அன்போடுகூடிய மரியாதையும் இருக்கும், அது பரிசுத்தமாயும் அர்த்தமுள்ளதாயும் இருக்கும் மிகவும் ஆழமுள்ளதாயும் இருக்கும். எனக்கும்கூட அப்போது, இக்கவிதையில் குறிப்பிட்டுள்ளதுபோன்றதொரு நெருங்கிய உயிர்தோழிகள் ஒருசிலர் இருந்தனர். இப்போது அதனைவிடவும் அதிகமான எண்ணிக்கையிலும் அதனைவிட ஆத்மார்த்தமான உயிர்தோழிகளும் இருக்கிறார்கள்.
இக்கவிதையை படிக்கும் ஒவ்வொருவருமே, அல்லது இதனையொத்தக் கருத்தை வலியுறுத்தும் பதிவினை படிக்கும் எவருக்குமே, நாமும் இப்படியொரு நல்ல நண்பனாக குறைந்தபட்சம் ஒரு பெண்ணிற்காவது இருக்கவேண்டும் என்று தோன்றும், அல்லது நமக்கு இந்தளவிற்கு இருக்கும் நண்பர்களின் நினைப்புவரும். இல்லாவிட்டால் நமக்கு இந்தளவிற்கு நெருங்கியவொரு நல்ல நட்பில்லையே என்றும்கூட தோன்றும். மொத்தத்தில் அந்த புது மணப்பெண்ணின் உயிர்த்தோழனின் கதாப்பாத்திரத்தில் மட்டுமே பெரும்பாலும் நம்மை பொருத்திப்பார்க்க தோன்றும்.
நானும்கூட இப்போது வரையிலுமே அப்படிதான் என்னை பொருத்திப்பார்த்திருக்கிறேன், மேலும் ஒருசில தோழிகளிடத்து இந்தளவிலான உரிமையையும் உணர்வினையும்கூட பெற்றிருக்கிறேன். ஆனால் ஒரு ஆணாக ஒருபோதும் அந்த கணவனது காதாபாத்திரத்தில் என்னை பொருத்திப் பார்த்ததே இல்லை. இது என்னமாதிரியான ஒரு உளவியலோ என இப்போதுவரை தெரியவில்லை. ஏன் என்று இப்போது யோசித்துப்பார்க்கலாமென்று சற்றே யோசிக்கையில், ஒன்றுமட்டும் தெளிவாக புரிந்தது.
எவனொருவன் ஒரு பெண்ணிற்கு நல்ல நண்பனாக இருக்கிறானோ அவனே தன் மனைவிக்கும் நல்ல கணவனாகவும் இருப்பான். அதாவது தன் மனைவிக்கும் கூட நல்ல ஆண் நண்பர்கள் இருப்பார்கள் என்கிற உண்மையை புரிந்து கொண்டும் ஏற்றுக்கொண்டும் அதனை அங்கீகரித்தும் கொள்கிற மனப்பக்குவம் கொண்டவனே நல்ல கணவன், அவனுக்கு கண்டிப்பாக ஒருசில நல்ல பெண்தோழிகளும் இருப்பர். இப்படிப்பட்ட நபர்கள் நம்மிடையே மிகவும் அரிதாகவே காணப்படுகின்றனர். அப்படியான ஓரிரு நல்ல கணவர்களை சமீபத்தில் சந்தித்ததாலேயே இப்பதிவை போடவேண்டுமென்ற எண்ணம் வந்தது.
இதுவரையில் நானோ நாமோ அப்படி யோசித்திருப்போமா என்றெல்லாம் தெரியாது, ஆனால் இனிமேலாவது நாம் அப்படியிருக்க முயற்சியாவது செய்ய பழகுவோம். பெண்களை பொருத்தமட்டில் திருமணத்திற்குப்பிறகு அவர்களது பெண் தோழியரின் என்ணிக்கையே குறைந்துவிடும் நட்புவட்டமானது இன்னும் ஒரு குறுகிய வட்டமாக சுருங்கிவிடும். இதிலெங்கே ஆண் பெண் நட்பானது நீடிக்க முடியும், அந்த ஆண்நண்பர்களும் தங்களது தோழிக்கு திருமணமாயிற்றே இனியும் நாம் அப்பெண்ணிடம் நட்புபாராட்டல் என்பது உகந்ததல்ல என்றெண்ணி தொடர்பை குறைத்தும் கொள்கிறார்கள்.
இதற்கு காரணம், அத்தோழியின் கணவர் தங்களது நட்பை தவறாக புரிந்து கொள்வாரோ என்கிற எண்ணம் மட்டுமே. அவரும் ஆண் தானே, அவரும்கூட அவரது தோழியின் நட்பை அத்தோழியின் திருமணத்திற்கு பிறகு துண்டித்துக்கொண்டவராக இருந்திருக்கலாம்தானே இது இப்படியே அடுத்தவர் மாற்றி அடுத்தவரென போய்க்கொண்டிருக்கும்.... எனவே இது ஒரு ஆணை சுற்றியே பின்னப்படும் ஒரு போலி கட்டமைப்பாகும் என்பதை புரிந்துகொண்டால் வாழ்க்கை இனிமையாகும்.
எனவே நான் முடிவெடுத்தவிட்டேன் எப்படி என் தோழிகளுக்கு நான் நல்ல நண்பனாக இருக்கிறேனோ அவ்வாறே என் மனைவிக்கும் ஒரு நல்ல கணவனாக அவளது நட்பை நண்பர்களை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவத்தை இப்போதிலிருந்தே வளர்த்துக் கொள்ளவேண்டுமென. நீங்களும் இந்த எண்ணத்தைத்தான் மாத்துங்களேன்....

மிகவும் அருமையான பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது ..
பதிலளிநீக்குநன்றி
நீக்குEn nanbanai manapaval migavum bagyasali👌
பதிலளிநீக்குமிக்க நன்றி தோழி.!
நீக்கு