வாழ்க்கைத்துணை
குணசாலியான ஸ்திரீயை கண்டுபிடிப்பவன் யார்?
மனிதரில் யாருமில்லை/ஒருவருமில்லை என்பதே பதிலாகும். இங்கு யாருமில்லை/ஒருவருமில்லை என்பதை கண்டுபிடிப்பவனுக்கோ அல்லது குணசாலியான ஸ்திரீக்கோ எடுத்துக்கொள்வது படிப்பவரின் தனிப்பட்ட விருப்பம்.
நமக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணை, எவ்வாறு இருக்கவேண்டுமென்ற பலவாறான எண்ணம் நம் அனைவருக்கும் இருக்கும்தானே, அதில் ஜெபத்தின் பங்கே மிகமுக்கியம். ஜெபத்தின் மூலமே தான் நாம் நமக்கான துணையை தேர்ந்தெடுக்க முடியும். அதிலும் குறிப்பாக நாம் எப்படியெல்லாம் இதற்காக ஜெபிக்க வேண்டும் என்று பலரும் பல நல்ல நல்ல ஆலோசனைகளையும் வழிமுறைகளையும் நிறையவே வழங்கி இருக்கின்றனர்.
"தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்." யோபு 42 : 2ன்படி நானும் எனது விருப்பத்தையும் எதிர்பார்ப்பினையும் எப்படி ஒருசேர இணைத்து ஜெபிக்கிறேன் என்பதனை இப்பதிவின் வாயிலாக சொல்லியிருக்கின்றேன் அவ்வளவே. விருப்பமிருப்பின் தொடர்ந்து படியுங்கள், இல்லையேல் எனது மற்ற பதிவினை படித்துவிட்டு தங்களது மேலான கருத்துக்களை தெரிவித்துவிட்டுப் போங்கள்...
மனைவிமார்களால் நோகடிக்கப்படுகிற பல கணவன்மார்களின் விலா எலும்பினைப் போலல்லாது, என் விலாயெலும்பிலிருந்து வந்தவளாய் எனக்கென்று முன்குறிக்கப்பட்டவளாக இருத்தல் அவசியம், இன்னும் சொல்லப்போனால் அது அப்படித்தான் கர்த்தரால் எப்படியாகிலும் இணைக்கப்படும். "தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறார்" - பிலிப்பியர் 2 : 13ல் சொல்லியுள்ளபடி நாம் பார்க்கின்ற அல்லது தேடுகின்ற பல வரன்களில் ஒன்றிரண்டின்மீது விருப்பமோ அல்லது எண்ணமோ வரும் நமக்கு ஏற்றதாக படுகிறதேயென்று. அதிலும் சரியானதை உகந்ததை பொருத்தமானதை தேர்ந்தெடுக்க இன்னும் ஜெபிப்பது அவசியம். இதனை பொதுவான, அனைவருக்குமான ஒரு ஆலோசனையாகத்தான் சொல்லுகிறேன்.
"'நீதிமொழிகள் 31-ல் சொல்லியுள்ளதுபோல், புகழப்படும் அளவிற்கு கர்த்தருக்கு பயப்படுகிற பெண்ணாயும், வரப்போகும் கணவனின் இருதயத்தின் நம்பிக்கையை பெறுகிறவளாயும், உயிரோடு இருக்கிற நாளளவும் கணவனுக்கு நன்மையையே செய்கிறவளாயும், ஞானமுள்ள பெண்ணாயும் பாக்கியவதியென்று பெயர் எடுக்கிறவளாயும் இருக்கவேண்டும்.' என்று எந்தவொரு ஆண், தனக்கு வரப்போகும் பெண்ணைக்குறித்து இப்படியொரு ஜெபம் செய்கிறானோ அப்படிப்பட்ட ஒருவன்தான் எனக்கு கணவனாக வரவேண்டும்." என்று எந்தவொரு பெண் இப்படி ஜெபிக்கின்றாளோ, அப்படிப்பட்ட ஒரு பெண்ணே எனக்கு மனைவியாக வேண்டும். "அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்" என்ற வார்த்தையின்படியே, கர்த்தரால் நாங்கள் இணைக்கப்பட்டால், எவராயினும் பிரிக்காதிருக்கவும், எதுவாயினும் பிரியாதிருக்கவும் வேண்டும்.
இதுவே திருமணம் குறித்தான எனது ஜெபம், நான் இவ்வாறுதான் ஜெபிப்பேன். இதனையேதான் நான் கர்த்தரிடத்தில், ஒருவேளை எனக்கென்று நீர் ஏற்கனவே ஒரு பெண்ணை முன்குறித்துவைத்து இருந்தீரானால் அப்பெண்ணை நானோ, எனது பெற்றோரோ அல்லது பிறரோ தேடி கண்டுகொள்ள, இந்த ஜெபத்தையே வெளிப்படுத்திக் காட்டுவதற்கான ஒரு அடையாளமாகவும் (எலியேசர் போல) வேண்டிக்கொள்வேன். "ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்." என்று எபேசியர் 5 :17ல் சொல்லியுள்ளபடி, எனக்கான கர்த்தருடைய சித்தத்தை அறிந்துகொள்ள ஜெபிப்பது மட்டுமே இப்போது என் அநுதின ஜெபம்.
நன்றி.!

பதிலளிநீக்குAbsolutely....Iam strongly believing this....And it's very useful article....Only God can select virtuous women...We cant select but we can pray...Thank you...Go forward
Thank you.!
நீக்கு
பதிலளிநீக்குSafest place in this world is standing in center of God's will...
மிகச்சரி, அவரது பலத்த கைக்குள் அடங்கியிருத்தலே பாதுகாப்பு.!
நீக்கு