ஆயிஷா

மதுரையில் நடந்த புத்தகத் திருவிழாவில் நான் என் Budgetக்குள் அடங்கியவாறு இரா.நடராசன் எழுதிய 'ஆயிஷா' என்னும் புத்தகத்தை வாங்கினேன். பின்னாளில் அவர் 'ஆயிஷா இரா.நடராசன்' என்றே அறியப்படுகிறார், இந்த விஷயம் எனக்கு முன்னரே தெரியும் இன்னும் அந்த புத்தகம் எதைப்பற்றியதுமெனகூட முன்னமே தெரியும்.
இன்றுதான் நான் முழுவதுமாக புத்தகத்தை படித்து முடித்தேன், வெறும் 20நிமிடங்களே ஆனது முழு புத்தகத்தையும் படித்து முடிக்க அவ்வளவு சிறிய புத்தகம். ஆனால் இது உணர்த்திய கருத்துக்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் அளப்பரிய முடியாதது, முடிந்தால் நீங்களும் படித்துப்பாருங்கள். இந்தகால சூழ்நிலைக்கேற்ற அருமையான புத்தகம்.ஏனென்றால் 'ஆசிபா'க்கள் 'ஆயிஷா'க்களாகமலும், 'ஆயிஷா'க்கள் 'அனிதா'க்களாகாமலும், 'அனிதா'க்கள் 'டாக்டர்'களாகாமலும் நசுக்கப்பட்டும் பொசுக்கப்பட்டும் கொண்டிருக்கின்றனர்.!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொரோனாவால் விளைந்தவை

வாழ்க்கைத்துணை

மாற்றமில்லை