'ங்'கும் கொங்கும்


"ங்ங்ங்....கா"

"ங்ங்ங்...கா சொல்லு ங்கா" என்று என் தாய் நான் மழலையாக இருந்தபொழுது பேசச்சொல்லிப் பழக்கிய 'ங்'தான் 'ம்ம்ம்...மா' தவிர்த்து நானாக பேசிப்பழகிய முதல் வார்த்தை என்று நினைக்கிறேன்.

கோவையும் அதனைசுற்றியுள்ள கொங்கு மண்டலம் எனப்படுக்கிற நிலப்பரப்பிலேயே இவ்வெழுத்தானது ஒன்றிவிட்டதாகத்தான் பார்க்கிறேன். மேலும் இவ்வெழுத்தே இம்மண்டலத்திற்கானதாக மட்டும்தான் உள்ளதாகப்பார்க்கிறேன்.

மரியாதையான ஊர், மரியாதையான மக்கள் & மரியாதையான மொழி என்றெல்லாம்  அழைக்கப்படுவதற்கும் இவ்வெழுத்திற்கே பெரும்பங்குள்ளது என்பதும் என் எண்ணம் என் கருத்து எல்லாமே.

ங்கோவ், ஏனுங், வாங், போங், இல்லீங், ஆமாங், சரிங், தப்புங், Etc இப்படி 'ங்'கு இல்லாமல் இங்கு தமிழை யாராலும் பேசவேமுடியாது.  இவ்வெழுத்தின் உச்சரிப்பின் ஓசையில்கூட ஒருசிறு இசை நயமும் உள்ளதோ எனும் ஐயமும் எழுகிறது.

முடிவாக கொங்கும் 'ங்'கும் ஒன்றையொன்று நன்றாக பிண்ணிப்பிணைந்துள்ளது என்பது மட்டும் புலனாகிறது. இது உண்மையிலேயே மென்மையான 'மெல்லின மெய்'தான் என்பதும் மெய்யாகிறது.!

குறிப்பு:
இப்படியொரு பதிவை நான் என் வலைப்பூவில் பதிவிடவேண்டுமென சற்றுமுன்னர்தான் நான் பிறந்த ஊரான சங்கம்வைத்து தமிழ்வளர்த்த மதுரையில் நானிருக்கின்ற இவ்வேளையில் எதேச்சையாக தோன்றியது எனக்கு, இதுவே ஒரு அழகிய நகைமுரண்தானோ.?!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொரோனாவால் விளைந்தவை

வாழ்க்கைத்துணை

மாற்றமில்லை