நான் சிலாகிக்கும் நீ

உன்னைப்போல எனக்கு நம்மிடையேயான, 'பஸ்ஸில் நாம் ஓடிப்போய் சீட்டுபோட்டுவிட்டு நமக்குள் போட்டுக்கொண்ட ஜன்னலோரசீட்டுச் சண்டை', 'ஆளாளுக்கு அவரவருக்குப் பிடித்தபடம் பார்க்க சண்டையிட்டுப்பின் ஒன்றாக பார்த்துவந்த மொக்கைப்படம்', 'பெட்ரோல் தீர்ந்து ஒன்றரை கிலோமீட்டர் ஓசி பைக்கை தள்ளிட்டுப்போய் நாம் சாப்பிட்ட ஐஸ்க்ரீம்', 'மாலுக்கு ஷாப்பிங்க்கு போய் பணம்பத்தாமல் இங்கயெல்லாம் காஸ்ட்லின்னு சொல்லி நழுவிட்டுவந்து, பிளாட்பாரக்கடையில் இருவரும் மேட்ச்சாக எடுத்த டிரஸ்' இதுபோன்ற ஒவ்வொரு சின்னச்சின்ன விசயத்திலும் ஔிந்திருக்கும் சந்தோஷ ஞாபகத்தருணங்களை அவ்வளவு அழகாக உணர்ந்து ரசித்து அனுபவித்துச் சொல்லத்தெரியாது, மேலும் உன்னைப்போல ரசனையாக வார்த்தையிலும் வடித்தெழுத தெரியவேத்தெரியாது.
ஆனால் எனக்கு ஒன்றுமட்டும் நிச்சயமாக சொல்லத்தெரியும், உன்னுடைய இவ்வாறான ஒவ்வொரு சின்னசின்ன சிலாகித்தலையும்கண்டு நான் எனக்குள் சிலாகித்துக் கொள்கிறேனென.!

~ நான் சிலாகிக்கும் நீ  ~

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நினைவில் நின்றவர்கள்

பிரியமுடன் பிரியாவிடை

மாற்றமில்லை