எண்ணத்தின் தோன்றல்கள்
சமூகவலைதளங்களிலோ அல்லது தன் முகநூல் பதிவேட்டிலோ 'நான் இப்படித்தான் என் விருப்பப்படி இருப்பேன், இப்படித்தான் அமருவேன், இப்படித்தான் உடையுடுத்துவேன், இப்படித்தான் சிகை திருத்தம் பண்ணிக்கொள்வேன், இப்படித்தான் மூக்குத்தி குத்திக்கொள்வேன், யாராகயிருந்தாலும் எதுவானாலும் எனக்கு பிடித்தவனைத்தான் மணப்பேன் அல்லது எவனையாவது எனக்கு பிடிக்கும்வரை மணம்புரியமாட்டேன்',
இப்படியான தன் சுயம் சார்ந்த சுயவிருப்பப் பதிவுகள் போட்டிருக்கும் எனக்குத்தெரிந்த ஒருசில பெண்களின் காலக்கோட்டில் இப்பொழுதோ அல்லது முன்னர் எப்பொழுதோ அவர்களால் போடப்பட்டிருக்கும் பதிவுகளுக்கு எதிர்ப்பு, மறுப்பு, வேதனை தெரிவித்து வந்த கருத்துக்களையெல்லாம் ஓரங்கட்டிவிட்டபின்,
ஆதரவாக பதிவிட்டிருந்த ஆண்களின், அவளை அவள் இஷ்டத்திற்கு, 'நீ, உனக்கு தோன்றியபடியெல்லாம் செய்' என்றோ 'அது உனது விருப்பம்' என்றோ 'நோ பிராப்ளம்' என்றோ 'உன் சுதந்திரம்' என்றோ 'நீ நீயாகவே இருமா' என்றோ வந்த இதுமாதிரியான கருத்துக்களைமட்டுமே படித்துப்பார்த்தபின் எனக்கு தோன்றியது,
அவளுக்கு அந்த உரிமையையளிக்க அல்லது அவளது விருப்பத்திற்கு அவளை நீ செய்து கொள்ளம்மா என்று ஒப்புதல் அல்லது சம்மதம் (கருத்தின் மூலம்)வழங்க முதலில் நாம் யார்? ஏதோ நாம் தான் அவளுக்கான சுதந்திரத்தை அவளுக்கு அளிப்பதுபோல் ஆதரவு கருத்து கூறுகிறோம்.
ஏற்னவே அவளுக்குக்கான சுதந்திரம் அவளிடமட்டுமேதான் உள்ளது, ஏற்கனவே அவள் அவளாகத்தானே இருக்கிறாள், ஏதோ நாம்தான் அவளை அவளாக மாற்றி 'நீ நீயாக இரும்மா' என்று பெருந்தன்மையுடன் அவளை உலகத்திற்கு அறிமுகம் செய்வதுபோலான அவர்களது கருத்துக்களை படிக்கையில் தோன்றிற்று இப்படி, இதுமாதிரி ஆதரவாக போடப்படும் கருத்தும்கூட ஏதோ ஒருவிதத்தில் ஆணாதிக்கம் நிறைந்த கருத்தாகத்தான் இருக்கிறதோ என்று.!?

கருத்துகள்
கருத்துரையிடுக