'இன்னொருவனாய்'

என் நெடுநாளைய தேடலின்முடிவில்,
'என்னைப்போல் ஒருவனாய்' யாருமே இங்கில்லை 
என்றெண்ணி நடப்பதையெல்லாம் பார்த்துப்பின் 
குறைந்தபட்சம் நான் 'ஒருவனாய்' 
அநியாயத்தை தட்டிக்கேட்கும் 'தனி ஒருவனாய்', 
அநீதிகளையும் 'உன்னைப்போல் ஒருவனாய்',
தவறுகளை திருத்தும் 'எவனோ ஒருவனாய்'
இருக்கவேண்டுமென்று விழைந்தாலும் 
வாழ்க்கையென்னமோ 'ஆயிரத்தில் ஒருவனாய்'
மிகச்சாதாரணமாக என்னையும் 'எனக்குள் ஒருவனாய்' 
வெறும் கனவுலகில்மட்டுமே அப்படி வாழவைக்கிறது.!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொரோனாவால் விளைந்தவை

வாழ்க்கைத்துணை

மாற்றமில்லை