மீண்டுமொருமுறை, நான் ___

"மீண்டுமொருமுறை நாம் எதற்கும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகிக்கொள்வோமா, நாமிருவரும் எவ்விததொடர்பற்று வெகுதூரம் போய்விட்டோம் நம்மொருவரைவிட்டொருவர்*.

இச்சிறுதுகால இடைவெளியில் நமக்கிடையேயான அந்நியோன்னியமானது குறைந்திருக்கலாம், புரிதல் குறைந்திருக்கலாம் அல்லது நம்மைப் பற்றிய நினைவுகளே நம்மிருவருக்கும் குறைந்திருக்கலாம்.

நமக்கிடையேயான உரையாடலின் தன்மைகள் மாறியிருக்கலாம் மேலும் நம்மிருவருக்குமேயான உரையாடலின் வார்த்தை பிரயோகத்தின் அர்த்தங்களை நாம் மறந்திருக்கலாம் அல்லது மாற்றியிருந்திருக்கலாம்.

( * - நம்மொருவரைவிட்டொருவர் என்பதை முதலில் 'நம் ஒருவரை விட்டு ஒருவர்' என்பதாகத்தான் தட்டச்சு செய்தேன் பின்னர் இப்பொழுதுதான் ஒருபெரும் நீண்ட இடைவெளிக்குப்பின் நாம் இணைந்திருக்கின்றோம், மீண்டும் எதற்காக இடைவெளி என்று சேர்த்துவிட்டேன்.)

எனவேதான் சொல்கிறேன் நாமிருவரும் ஒருவருக்கொருவர் மீண்டும் அறிமுகம் ஆகிக்கொள்வோமா?",
.
.
.
.
.
.
.
என்று இப்பதிவை முடிக்கலாம் என்றிருந்தேன்.
.
.
.
ஆனால் "ஆம், நாமிருவரும் ஒருவருக்கொருவர் எவ்வித தொடர்பற்று கொண்டிருந்தோம் தான், ஆனாலும் ஒருவருக்கொருவர் தொடர் பற்றும் கொண்டிருந்தோம்" என நீ கூறிய இவ்வார்த்தையில் எல்லாமே அடிபட்டு என்மீது நீ வைத்த அன்பானது உன்மீது நான்வைத்த அன்பினைவிட பெரிதென என்னை பொட்டிலறைந்து உரக்கச் சொல்லிப்போய்விட்டது...!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொரோனாவால் விளைந்தவை

வாழ்க்கைத்துணை

மாற்றமில்லை