சுவர்
"சுவர் என்பது வழக்கமாக ஒரு இடத்தை அல்லது வெளியை வரையறுக்கின்ற அல்லது அதனைப் பாதுகாக்கின்ற ஒரு அமைப்பாகும். சரிவான நிலையில் அமைந்த சுவர்களும் இருந்த போதிலும் சுவர்கள் பொதுவாக நிலைக்குத்து அமைப்புகளாகும். மிகப் பொதுவாக, சுவர்கள் கட்டிடங்களினுள் இடத்தைப் பல்வேறு அறைகளாகப் பிரிப்பதுடன், கட்டிடத்தின் உட்பகுதிகளை வெளிப்புறப் பகுதிகளினின்றும் பிரிக்கின்றது. கட்டிடங்களுக்குரிய அல்லது வேறு நடவடிக்கைகளுக்குரிய நிலப் பகுதிகளை வரையறுத்துப் பாதுகாப்பதற்கும் சுவர்கள் அமைக்கப்படுகின்றன. பெரிய நாடுகளின் பாதுகாப்புக்காக ஊடுருவல்களைத் தடுப்பதற்கும் சுவர்கள் அமைக்கப்படுவதும் உண்டு. புகழ் பெற்ற சீனப் பெருஞ் சுவர், இப்பொழுது அகற்றப்பட்டுவிட்ட பெர்லின் சுவர் என்பன இவ்வாறான சுவர்களுக்கு எடுத்துக்காட்டுக்கள் ஆகும்."
👆 இது விக்கிபீடியாவில் "சுவர்" என்ற தலைப்பில் பதிவிடப்பட்டுள்ள பதிவின் முதல் பத்தியாகும். இணைய முகவரி: https://ta.wikipedia.org/wiki/சுவர் ஆனால் இதனை நான் இந்நாட்களில் பதிவிட வேண்டிய அவசியம்தான் என்னவோவென்று உங்களுக்கு தோன்றலாம், சொல்கிறேன்.
பொதுவாக கட்டிடமோ அல்லது சுவரோ எழுப்ப கற்காலம் முதற்கொண்டு தற்காலம் வரையிலும் பயன்பட்டு வந்த பொருட்கள் பொதுவாக கருங்கற்கள் அல்லது செங்கற்கள், பூசுவதற்கு சிமெண்ட் எனப்படும் சாந்து, நீர், மணல், இன்னபிற பொருட்கள் ஆகும். ஆனால் அறிவியல் வளர்ச்சி மேலோங்கியிருக்கும் நவீன இந்நாட்களில் சுவர்கள் எழுப்பப்படுவதற்கான/எழும்புவதற்கான காரணமுஞ்சரி கட்டுமான பொருட்களுஞ்சரி சற்றே, இல்லையில்லை மொத்தமாகவே மாறியுள்ளன நம்நாட்டில்.

அவையாவன தன்னை உயர்ந்தவனாகக் காட்டிக்கொள்ள நினைத்துச் செய்யும் தாழ்ந்த கேவலமான நடத்தைகள், கற்பாறையாகிப்போன மனங்கள், தனக்கென்று அடையாளமாக இருக்கவேண்டியே மீறப்படும் சில எல்லைகள் மற்றும் வரம்புகள்,காலங்காலமாக அஸ்திவாரம்போல் ஆழமாகப்போடப்பட்ட பகையுணர்வுகள், நீடித்து நிலைக்க பலரது கண்ணீர்கள் மேலும் சிந்திய சிந்தச் செய்த ரத்தங்கள், பூசி மெழுகுவதெற்கென்றே சில ஜாதிமத பிரச்சனைகள், மேற்கொண்டு எழுப்ப பல சலித்தெடுத்த மண்ணாங்கட்டிகள் சில களிமண்ணுகள், பட்டி பார்ப்பதுபோல் பதமாக உட்புகப்பட்ட பிரிவினைவாத எண்ணங்கள், இறுதியாக வர்ணம் பூச... அதான் ஏற்கனவே இருக்கிறதே வர்ணங்கள் பிறகெதற்கு?!
இம்மாதிரியான சுவர்கள் எல்லாம் எங்கெங்கு உள்ளன என்று ஒன்றிரண்டை சுட்டிக்காட்டுகிறேன், பிறகு நீங்களேகூட அதுபோல எங்கேனும் சுவர்கள் உங்களுக்கு தெரிந்து எழுப்பட்டால் அப்பொழுது இங்கே கீழே கருத்துபேழையில் தெரிவியுங்கள். முதலாவது அமெரிக்க அதிபர் இந்தியா வருகிறார் என்று குஜராத்தில் குடிசை பகுதியை மறைக்க கட்டப்பட்ட சுவர். பின்னர் கொங்கு தமிழ் கொஞ்சி விளையாடும் கோவை மாவட்டத்தில் தன்வீட்டை பாதுகாக்கவேண்டி விதிமீறி உயர்த்திக்கட்டி, அருகிலிருந்த குடிசை பகுதியில் இடிந்து விழுந்து 17 அப்பாவிகளின் உயிரை காவு வாங்கிய சுற்றுச்சுவர். அடுத்து கொரோனா காலகட்டத்தில் மாவட்ட மாநில எல்லையை பாதுகாக்கிறோம் என்று சொல்லி, வாகன போக்குவரத்து நடைபெறும் முக்கியமான சாலையின் நடுவில் எழுப்பப்பட்ட சுவர். இன்னும் பல மாநிலங்களில் பல மாவட்டங்களில் எழுப்பப்படுகிற எழுப்பப்பட்டிருக்கிற தீண்டாமை சுவர் என்று சொல்லிக்கொண்டே போகலாம்...!

கருத்துகள்
கருத்துரையிடுக