செலவிடுதல்
இன்றையநாளில் மொபைல் போன் இல்லாத மனிதர்களே இல்லை எனலாம். அதிலும் ஆண்ட்ராய்டு போன் இல்லாத இளைஞர்களே இல்லை எனலாம். பொதுவாக நாம் அதில் நெட் பேக் போடுவோம், நமக்கு தகுந்தவாறு, நெட்ஒர்க்குக்கு தகுந்தவாறு, பணத்திற்கு தகுந்தவாறு, நாளொன்றுக்கு 2ஜிபியோ 1.5ஜிபியோ அல்லது 1ஜிபியோ, 28நாட்களுக்கோ 56நாட்களுக்கோ அல்லது 84நாட்களுக்கோ என்று நமது விருப்பத்தின்படி.
குறிப்பாக அப்படி போட்டபின் டேட்டாவை நாம் பயன்படுத்த தொடங்குவோம். எப்படியும் இன்றைய நாட்களில் நமது மொபைல் தேவைகளுக்கு அந்த டேட்டா பத்தாமல்தான் போகும் பெரும்பாலும் சீக்கிரமே தீர்ந்தும்விடும், பிறகு யாரிடமேனும் ஓசியில் வைஃபை பிச்சையெடுத்தும் தொடர்ந்து நோண்டிக்கொண்டிருப்போம். இது பொதுவாக பெரும்பாலோனோர் தினந்தோறும் செய்யக்கூடிய நிகழ்வுதான். சிலர் தங்களது பெற்றோரின் போனிலும் ஹாட்ஸ்பாட்டின் வாயிலாகவும் நோண்டுவதுமுண்டு.
இதெல்லாம் எல்லாரும் செய்வதுதான், எல்லாருக்கும் தெரிந்ததுதான் பின்னே நான் எதற்கு இவைகளை இப்பொழுது சொல்லி படிக்கின்ற உங்களை கொடுமை செய்கிறேன் உங்களது டேட்டாவை தேவையில்லாமல் வீணடிக்கிறேன் என்றுதானே தோன்றுகிறது உங்களுக்கு, சொல்லுகிறேன். மேற்சொன்னபடி அன்றைய ஒருநாளின் டேட்டா தீராத பட்சத்தில் நம்மில் எத்தனைபேர் தூங்காமல் நள்ளிரவு பன்னிரண்டு மணிவரையில் முழித்திருந்து அதனை ஏதோவொரு வகையில் தீர்க்கிறோம்.
இன்னும் சொல்லப்போனால், சுத்தமாக நெட்ஒர்க் கிடைக்காத ஓரிடத்தில் கட்டாயமாக ஓரிருநாட்கள் தங்கவேண்டி வரும்பட்சத்தில் நம்மில் எத்தனைபேர் அதனை விரும்பியேற்போம். "ஐயையோ இங்கு நெட் எடுக்காதே, என்னபண்ணுறது போர் அடிக்குமே அதைவிட டெய்லியும் நெட் ஜிபி கணக்குல யூஸ் பண்ணாமலேயே அநியாயமா வேஸ்டாப்போகுதே" அப்படின்னு கிடந்து மனசு அல்லாடுறவங்க தான் இங்கு அதிகம். இதில் இளைஞனானாலுஞ்சரி இளைஞி ஆனாலுஞ்சரி எல்லாருமே ஒன்றுதான்.
என்றைக்கேனும் யோசித்திருப்போமா நம்மை படைத்த ஆண்டவர் நமக்கு தினந்தோறும் 24 மணிநேரத்தை தருகிறார், ஆனால் நம்மில் எத்தனைபேர் அன்றைய நாளின் கொஞ்ச நேரத்தையேனும் அவருக்கென்று செலவிடுகிறோமென்று. அப்படி நாம் சிறிதளவேனும் செலவிடாத பட்சத்தில் அவரது மனம் என்ன பாடுபடும் எவ்வளவு வேதனைப்படும் ஐயோ என் மகன், என் மகள் இப்படி என்னோடு நேரம் செலவளிக்காமல் இருக்கிறானே இருக்கிறாளே என்று.
ஒன்றுக்கும் பயனற்றதுமான நெட்டுக்கே, நாம் பயன்படுத்தாமல் அநியாயமா வேஸ்டா போகுதேனு இவ்வளவு வருத்தப்படும்போது, நம்மை படைத்து காத்து வழிநடத்திட்டு வருகிற நமது ஆண்டவர், நாம் அவரோடு கொஞ்சநேரத்தைக்கூட செலவிடாமல் போனால் நம்மேல் எவ்வளவு வருத்தப்படுவாரு, நம்முடைய ஆத்துமாவின் மேல் எவ்வளவு கரிசனையோடு அக்கறையோடு வேதனைபட்டுக் கொண்டு இருப்பாரு, எவ்வளவு துக்கப்படுவாரு, எவ்வளவு பரிதவிப்பாரு, இனியாவது இளைஞராகிய நாம் சிந்திப்போமா, செலவிடுவோமா நமது நேரத்தை அவருக்கென்று அவரோடு பயனுள்ளவகையில்.?!

பதிலளிநீக்குYes true.....Nice....
Thanks.!
நீக்கு