எழுதுகோல் தந்த தூண்டுகோல்

கிரியாவூக்கி அல்லது காரணகர்த்தா இரண்டு வார்த்தைகளுமே ஏறக்குறைய ஒரே அர்த்தத்தை பிரதிபலிப்பதாகத் தான் தெரிகிறது, இரண்டிற்கும் பொருள் ஏதோ ஒன்று நிகழ அல்லது உருவாக காரணமான ஒன்று, இன்னும் தெளிவாக சொல்லப்போனால் இதன் விளைவாக உண்டான ஒரு முடிவு. இருப்பினும் கிரியாவூக்கி என்பது அஃறினைக்கும் பொருந்தும் அதாவது ஒரு சம்பவமோ, ஒரு எண்ணமோ, ஒரு சொல்லோ இன்னமும் ஏதுவாகவோகூட இருக்கலாம். 

காரணகர்த்தா என்பது உயர்திணைக்கு மட்டுமே பொருந்தும் கண்டிப்பாக ஒரு நபராக அல்லது ஒன்றிற்குமேலுள்ள நபர்களாக மட்டுமே இருப்பர். முதலில் 'காரணகர்த்தா' எனும் இவ்வார்த்தை உருவாக காரணமாக இருந்த காரணகர்த்தா நம் கர்த்தர் தான் என்பது என் கருத்து. கர்த்தர் தான் காரணம் என்கிற பதம்தான் இவ்வாறாக மாறியிருக்கிறது, ஆதலால் தான் காரணகர்த்தா என்கிறோம். உலகிலுள்ள அனைத்தையுமே உருவாக்கியவர் கர்த்தர் மேலும் இந்த உலகத்தையே உருவாக்கியவரும் அவர்தான். வேண்டுமானால் ஏதேனும் தேடுபொறியில் காரணகர்த்தா பொருள் என்ன என்று தேடிப்பாருங்களேன் 'முதற்கடவுள்' என்கிற முடிவினைத் தரும். அப்படியானால் கர்த்தர் தான் முதற்கடவுள் என்பது புலனாகிறது.

மேலும் 'கிரியாவூக்கி' எனும் வார்த்தையையுமே பார்த்தால், 'கிரியைகளை ஊக்குவித்தல்' என்கிற பதத்தில் தான் உருவாகியிருக்கும். கிரியை என்பது நாம் செய்கின்ற செய்கைகள். அதனை இன்னும் நற்கிரியைகளாக செய்யவேண்டி ஊக்குவிக்கும் விதமாக இவ்வார்த்தையானது சொல்லப்பட்டிருக்கும். அப்படி நாம் நற்கிரியைகள்/நற்காரியங்கள் செய்தால் கர்த்தர் மகிழுவார். அவரே நம்மை அப்படியான நற்காரியங்களை செய்யவைக்கும் காரணகர்த்தாவாகவும், அவரது கிரியையே நமக்கு நன்மை செய்யத் தூண்டும் கிரியாவூக்கியாகவும் இருக்கின்றது.

இப்படியொரு யோசனையை அல்லது சிந்தனையை தோன்றச் செய்து இப்படியொரு பதிவை போடசெய்த காரணகர்த்தா கர்த்தர்தான், அவரது கிரியையே என்னை தொடர்ந்து எழுதத்தூண்டும் கிரியாவூக்கி என்று நினைக்கின்றேன்.!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நினைவில் நின்றவர்கள்

பிரியமுடன் பிரியாவிடை

மாற்றமில்லை