கொரோனாவால் விளைந்தவை
 Quarantine - தனிமைப்படுத்துதல்  Pandemic - சர்வதேச பரவல்  Pestilence - கொள்ளை நோய்  Plagues - வாதைகள்  Lock-down - முடக்குதல்  Social distancing - சமூக விலகல் / சமூக இடைவெளி  Write off - ஒத்திவைப்பு செய்தல் & Waive off - தள்ளுபடி செய்தல்  (முதலாவதில், வாங்கிய பணத்தை வாங்கியவர்கள் திருப்பித் தரவேமாட்டார்கள்;  இரண்டாவதில், பணம் கொடுத்த வங்கிகள் பணத்தை திரும்பப்பெறவே மாட்டார்கள்)  Hydroxychloroquine - மலேரியாவிற்கான மருந்து.  Heist - திருட்டு  இத்தகைய பல புதிய புதிய வார்த்தைகளை நாம் கற்றுக்கொள்ள வழிவகை செய்தது.   "Positive" என்றவொரு நல்ல வார்த்தையை நம் அனைவரையும் வெறுப்புக்கொள்ள செய்தது. இரு தாயக்கட்டைகளில், ஒன்றில் தாயமும் மற்றொன்றில் மூன்றும் விழுந்தால் அது 'சோநாலு', இரண்டிலும் இரண்டிரண்டு விழுந்தால் அது வெறும் நாலு என்கிற வேறுபாட்டினை அறியச்செய்தது. 'போடா... கன்னட பொல்லாதவன்' என்று ஒருவரை திட்டுவதற்கு புதிய வசைமொழியை தந்திருக்கிறது. 30000 கோடியில் 40% என்பது 20000 கோடி என்கிற பள்ளிகளிலும் நாம் படித்திராத ஒரு அரும்பெரும் கணக்கினை அறியசெய்...