பிரியமுடன் பிரியாவிடை
“ஊரு ஒலகத்துல இருக்குற யார்யாருக்காகவோ Write -Up எழுதுறியே, உன் பிரண்ட் நானு, எனக்கு ஒன்னு எழுதணும்னு தோணுச்சாடா உனக்கு?”, என்று உரிமையோடு இப்படி என்னிடம் செல்லமாக கோபித்துக்கொள்ளுமளவு பிரியத்திற்கு சொந்தக்காரியானவளுக்கு.... ‘ K. தாமரைச் செல்வி’, இப்பெயரை 2008 -இல் ஆகஸ்ட்டு மாதத்தின் மூன்றாவது வாரத்தின் ஒரு நன்னாளில், பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கலை அறிவியல் கல்லூரியின் புத்தகச் சாலையில் B.Sc. Computer Science – Aided (2008-2011) என்று முகப்பில் ஒட்டியிருந்த ஒரு நோட்டில் கண்டபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அப்போது அளவேயில்லை. ஒரு பெயர் என்னை ஏன் இவ்வளவு மகிழ்ச்சிக்குள்ளாக்கியது என்று படிக்கிற எவருக்கும் ஒரு கேள்வி எழலாம். பின்னர் இருக்காதா, இனிமேல் பார்த்துக்கொள்வோமா மீண்டும் நட்பினை தொடர இனியேதும் வாய்ப்பு இருக்குமா என்று நினைத்து ஒருவருக்கொருவர் பரஸ்பரம் விடைபெற்றபிறகு மீண்டும் அதேப்பெயரானது 4 ஆண்டுகள்கழிந்து கண்ணில்பட்ட மகிழ்ச்சிதான் அது. இன்னும் நன்றாகவே நினைவிருக்கிறது, 2004 -ஆம் ஆண்டு மே மாதத்தின் தொடக்க வாரத்தில், பொள்ளாச்சி புனித லூர்து அன்னை நடுநிலைப்...